எனக்கு கிடைத்த சரியான அடி: தேர்தல் முடிவு குறித்து பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Thursday,May 23 2019]

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த பிரகாஷ்ராஜ், தான் வெற்றி பெறுவது உறுதி என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது நம்பிக்கை தெரிவித்தார்

ஆனால் தென் மாநிலங்களில் பாஜக அலை அடித்த ஒரே மாநிலம் கர்நாடகம் மட்டுமே என்பதால் அந்த அலையில் பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார். பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் அவர்களால் மூன்றாவது இடமே பெற முடிந்தது

இந்த நிலையில் தனது தோல்வி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியபோது, ''எனக்கு கிடைத்த சரியான அடி. இன்னும் பெரிய விமர்சனங்கள், கேலிகள் என்மேல் வைக்கப்படும். ஆனாலும் நான் என் நிலையிலிருந்து மாறப்போவதில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்... நீண்டதூரம் செல்லவேண்டிய கடினமான பயணம் தொடங்கியிருக்கிறது. இதுவரை என்பால் நின்ற அனைவருக்கும் நன்றி... ஜெய்ஹிந்த்'' என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 

More News

பிரபல நடிகை வெற்றி! அமைச்சராகவும் வாய்ப்பு!

மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்த மாநிலங்களில் ஒன்று ஆந்திர பிரதேசம். இந்த மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேச கட்சி மக்களவை மற்றும் சட்டமன்றம் என இரண்டு தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது

இந்தியா மீண்டும் வென்றுவிட்டது. பிரதமர் மோடி டுவீட்

மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதலே பாஜகவுக்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு

திருமணத்திற்கு பின் ஆர்யா-சாயிஷா எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின் முதல்முறையாக ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 

பிரதமர் மோடிக்கு கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து!

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக மீண்டும் பதவியேற்க தனது வாழ்த்துக்கள் என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாதித்துவிட்டீர்கள்: பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை தனித்தே பெற்றுவிட்டது.