யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது: மத்திய அமைச்சர் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துளார். மேலும் கேரளாவில் மலப்புரத்தில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிட கொடுத்து கிராம மக்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, யானையின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் நேற்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து மாநில வனத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் என்றும், மலப்புரத்தில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், வெடி பொருளை சாப்பிட வைத்து கொல்வது இந்திய கலாச்சாரம் அல்ல என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments