close
Choose your channels

நயன்தாரா படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ!

Friday, June 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்திற்கான தடையை நீதிமன்றம் நீக்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டவுள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'லவ் ஆக்சன் டிராமா' என்ற மலையாள திரைப்படம். 'நேரம்' நிவின்பாலி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது என்பதும் இந்த படம் வரும் ஓணம் திருவிழாவின்போது ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க நடிகர் பிரஜின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் பிரபலமான தொலைக்காட்சி சீரியலான 'சின்னத்தம்பி' சீரியலின் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 'டிஷ்யூம்', 'பழைய வண்ணாரப்பேட்டை' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நிவின்பாலி, நயன்தாரா நடித்த இந்த படத்தை தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். ஷான் ரஹ்மான் இசையில் ஜாமோன் ஜான் மற்றும் வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment