சந்திரனில் வெற்றி, சதுரங்கத்தில் தோல்வி.. உலககோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா போராடி தோல்வி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக உலக கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இதன் இறுதிப் போட்டி சமீபத்தில் தொடங்கியது என்பதும் இதில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா மோதினர் என்பதும் தெரிந்ததே.
இதில் முதல் இரண்டு சுற்றுகள் டிரா ஆனதால் இன்று மூன்றாவது டை-பிரேக்கர் சுற்று ஆரம்பமானது. இதில் வெற்றி பெறும் நபருக்கு தான் உலக கோப்பை சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் டை-பிரேக்கர் முதல் சுற்றில் நார்வையின் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதனால் டை-பிரேக்கர் இரண்டாவது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலை இருந்தது. இரண்டாவது சுற்று டிரா ஆனால் கூட கார்ல்சன் வெற்றி பெறுவார் என்ற நிலையில் இரண்டாவது சுற்றிலும் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
இதனை அடுத்து உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் டை-பிரேக்கர் சுற்றின் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற கார்ல்சன் உலக கோப்பையை வென்றார். அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தோல்வி அடைந்த இந்தியாவின் பிரக்ஞானந்தா கடைசி வரை போராடியதற்காக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நேற்று சந்திரனுக்கு இந்திய விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 வெற்றி பெற்ற நிலையில் இன்று சதுரங்கத்திலும் இந்தியா சாதிக்கும் என்று நினைத்த நிலையில் துரதிஷ்டவசமாக பிரக்யானந்தா தோல்வி அடைந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout