close
Choose your channels

வித்தியாசமான மேக்கப்பில் சூப்பர் சிங்கர் பிரகதி: கலாய்த ரசிகர்கள்!

Thursday, July 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்து பிரபலமானவர் பிரகதி குருபிரசாத் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் ஆஜித் தான் டைட்டில் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாவின் ’பரதேசி’ கிருத்திகா உதயநிதியின் ’வணக்கம் சென்னை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடல்கள் பாடினார் என்பதும், சமீபத்தில்கூட ’ராட்சசன்’ திரைப்படத்தில் ஜிப்ரான் இசையில் ஒரு அருமையான பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரகதிக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவ்வப்போது தனது வித்தியாசமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வது வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் வித்தியாசமான மேக்கப்பில், வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் சில புகைப்படங்களை பிரகதி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஒரு சிலர் லைக் செய்தாலும் பெரும்பாலானோர் இந்த புகைப்படங்களை கலாய்த்து வருகின்றனர். ஏன் இந்த வேண்டாத வேலை என்றும், நாங்கள் பார்த்ததிலேயே மிக மோசமான புகைப்படம் இதுதான் என்றும் பல கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment