நான் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்ல 2 கண்டிஷன்கள்: அதிர்ச்சி கொடுத்த பிரதீப்..!

  • IndiaGlitz, [Friday,November 10 2023]

பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது அநியாயம் என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள சில போட்டியாளர்கள் மட்டுமின்றி வெளியே இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்

இந்த விஷயத்தில் தீர விசாரிக்காமல் கமல்ஹாசன் செயல்பட்டுவிட்டார் என்றும் அவர் தனது தவறுக்கு பிராயச்சித்தமாக மீண்டும் பிரதீப்பை உள்ளே கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

மீண்டும் பிரதீப் உள்ளே வருவது சாத்தியமா என்று தெரியவில்லை என்றாலும் பிரதீப் இடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் பிரதீப், ’என்னை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே அனுப்பினால் இரண்டு நிபந்தனைகள் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நீங்கள் என்னை உள்ளே அனுப்ப நினைத்தால் எனக்கு எதிராக சதி செய்த இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற இரண்டு சிவப்பு அட்டைகள் எனக்கு வேண்டும். மேலும் நான் பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக ஒரு வாரம் இருக்க விரும்புகிறேன்’ என்று பிரதீப் கூறி உள்ளார்.

இந்த இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பிக்பாஸ் நிர்வாகம் பிரதீப்பை மீண்டும் உள்ளே அனுப்புமா? அவ்வாறு உள்ளே அனுப்பினால் அவர் எந்த இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு கொடுப்பார்? அவரது கேப்டன்ஷிப்பில் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.