அன்பை பரப்புங்கள்: ரஜினி சொன்ன குட்டிக் கதையை பதிவு செய்த பிரதீப்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினி சொன்ன குட்டிக்கதை வீடியோவை பதிவு செய்து அன்பை பரப்புங்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
இந்த வீடியோவில் ரஜினிகாந்த் ஒரு தவளை கதையை கூறுகிறார். 3 தவளை ஒரு மலை மீது ஏறிக் கொண்டிருந்ததாகவும் அதில் இரண்டு தவளை கீழே விழுந்து விட்ட நிலையில் ஒரு தவளை மட்டும் உச்சிக்கு சென்றதாகவும் கூறினார். ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்காது என்றும் அதனால் தான் அந்த தவளை யார் சொன்னதையும் கேட்காமல் இலக்கை அடைந்தது என்று கூறினார்.
இந்த கதையை கூறிய பிரதீப் ’அன்பை பரப்புங்கள்’ என்று பதிவு செய்து உள்ளார். மேலும் தன்னை சுற்றி எவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், அதை கண்டு கொள்ளாமல் தான் தன்னுடைய இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பிரதீப் மறைமுகமாக இந்த பதிவில் கூறியதை அடுத்து நெட்டிசன்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Spread love 💜#SethuramanRagasiyam pic.twitter.com/WGWy9FmpdM
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments