நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு.. பிக்பாஸ் பிரதீப்பின் நக்கல் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பிரதீப் தனது சமூக வலைத்தளத்தில் நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு, என்னை ஆளை விடுங்கள் என்று நக்கலுடன் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதீப் தங்களுக்கு ஆபத்தானவர் என பெண் போட்டியாளர்கள் சிலர் அபாண்டமாக பழி கூறியதை அடுத்து அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் கமல்ஹாசனும் அதற்கு உடந்தை என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவ்வப்போது சில கிண்டலான பதிவுகளை செய்து வந்த பிரதீப் தற்போது மீண்டும் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் ’இப்போ ஒரு நான்கைந்து தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கதை கேட்கிறார்கள், நான் கண்டிப்பாக கதையுடன் களத்தில் இறங்க உள்ளேன். நான்கு ஃபாரின் படம் பார்த்து, திருடி, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, படத்தோட வருவேன். என்னை ஆள விடுங்க. நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு, போயிட்டு வர்றேன், நல்லா இருங்க’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Seri, jolly ah irunchu...ippo oru 4-5 producers enna nambi kadhai kekuranga. Naan IFFI GOA 2024 kelamburen. Naalu Foreign padam paathu, thirudi, oru nalla script ready panni, padathoda varen.
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 19, 2023
Aala vidunga 🙏
Neengalachu, Bigg Boss Aachu 🏃
Poitu varen, Nalla irunga 🙌 pic.twitter.com/ORZjwp3NJF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com