close
Choose your channels

போறதுன்னா போயிகிட்டே இருக்க வேண்டியதுதானா.. கமல் முன் பிரதீப் கலாய்த்தது யாரை?

Sunday, October 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேறப் போகிறார். இந்த நிலையில் இன்றைய முதல் புரோமாவில் ’இன்று யார் வெளியேறுவார்கள் என்று நினைக்கிறீர்கள்’ என்று கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் கேட்கிறார்

அப்போது வினுஷா தான் போவார் என்றும் அவர்தான் என் கன்ஃபக்சன் ரூமில் சென்று நான் போகப் போகிறேன் என்று சொன்னார் என்றும் அவருக்கு விளையாட விருப்பமில்லை என்றும் நிக்சன் கூறினார்.

இதனை அடுத்து 'விஜய் அண்ணா தான் போவார் என்று நினைக்கிறேன் என்று ரவீனா கூறினார். பூர்ணிமா பேசும் போது 'வினுஷா போக தான் அதிக வாய்ப்பு உள்ளது. அவர் இந்த விளையாட்டுக்கு தகுதியானவர்தான், ஆனால் அவர் இந்த விளையாட்டிற்கு இன்னும் தயாராக இல்லை போல் தெரிகிறது என்று கூறினார்.

இதனை அடுத்து பேச வந்த பிரதீப் ’போறது என்றால் போயிட்டே இருக்கணும், போறேன், போறேன்னு சொல்லி ஏமாத்திட்டே இருக்க கூடாது’ என்று கூற கமல்ஹாசன் அவருடைய பேச்சை கேட்டு சிரித்தார்.

மொத்தத்தில் இன்று வெளியேறப் போவது யார் என்பதை கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியின் போது அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் இந்த வாரம் விஜய் வர்மா தான் எலிமினேஷன் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment