பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் கதை இதுவா? என்ஜினியரிங் மாணவர்கள் செம குஷி..!

  • IndiaGlitz, [Thursday,March 02 2023]

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ’லவ் டுடே ’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் கதை என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் குறித்தது என்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அதன் பிறகு ’லவ் டுடே’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகிய நிலையில் 100 கோடி வசூல் செய்தது கோலிவுட் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கே மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் என்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாகவும் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் குறித்த வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது.

’லவ் டுடே’ என்ற வித்தியாசமான படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் நிச்சயம் இந்த படத்தையும் இதுவரை வெளியாகாத வித்தியாசமான கான்செப்ட்டில் தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் என்ஜினியரிங் மாணவர்கள் செம குஷியாகியுள்ளனர்.

இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

ரஜினி நடிக்க இருந்த்க கதையில் சிம்பு? முதல் படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனரின் மாஸ் பிளான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்து அதன் பிறகு கைவிடப்பட்ட படத்தில் தற்போது சிம்பு நடிக்க இருப்பதாகவும் தனது இயக்கத்தில் வெளியான முதல் படத்தை சூப்பர் ஹிட் ஆகிய இயக்குனர் இந்த மாஸ் திட்டத்தை

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான அறிவிப்பு.. மீண்டும் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

லைகா நிறுவனம் இன்று காலை பிரமாண்டமான அறிவிப்பை வெளியிட போகிறது என்று செய்திகள் வெளியான நிலையில் அஜித் நடிக்க இருக்கும் 'ஏகே 62' படத்தின் அறிவிப்புதான் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஹாலிவுட் படத்திற்கு தயாராகிறாரா? மகேஷ்பாபுவின் வேற லெவல் வொர்க்-அவுட் புகைப்படம்..!

 தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் 20 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் மகேஷ்பாபுவின் லேட்டஸ்ட் வொர்க் அவுட் போட்டோஷோட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி

'மரணம் கண்டு பயப்படுகிறீர்களா? நடிகர் திலகம் சிவாஜியின் சிறப்பான பதில்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மரணத்தை கண்டு பயப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த சிறப்பான பதில் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

திவ்யபாரதியின் நம்ப முடியாத போட்டோஷூட்.. ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்..!

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சுலர்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை திவ்யா பாரதி. அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் தற்போது நடந்து வருகிறார்.