ரூ.5 கோடி பட்ஜெட்.. அரைசதம் அடித்த 'லவ் டுடே': திரையுலகினர் வாழ்த்து!

ரூபாய் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான பிரதீப் ரங்கநாதனின் ’லவ்டுடே’ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான ’லவ்டுடே’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் அவரே நாயகனாக நடித்து இருந்தார் என்பதும் இவானா நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக இளைய தலைமுறை இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த படம் வெளியாகி ஒரு சில நாட்களில் 25 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பத்து மடங்கு வசூல் செய்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து திரையுலகினர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் 'அப்பத்தா' பாடல்: பட்டையை கிளப்பும் வடிவேலு!

வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

உங்களை மகிழ்விக்க இல்லங்கள் தேடி வருகிறது 'பிரின்ஸ்': டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அறிவிப்பு

தீபாவளி கொண்டாட்டமாக  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில்,  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடிப்பில்,  வெளியான 'ப்ரின்ஸ்' திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங்

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

பழம்பெரும் தெலுங்கு நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 80.

'சர்தார்' படத்தை அடுத்து 'பிரின்ஸ்' ஓடிடி ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

 சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' மற்றும் கார்த்தி நடித்த 'சர்தார்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் தீபாவளி விருந்தாக கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியானது என்பது தெரிந்ததே. 

வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே.