'ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியா போட விட மாட்றாங்க..' பிரதீப் அந்தோணியின் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாய் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு கிடைத்த கமெண்ட்ஸ்களை பார்த்து’ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியா போட விட மாட்றாங்க..’ என்று அடுத்த பதிவை செய்து உள்ளார்.
சற்று முன் பிரதிப் தனது சமூக வலைதளத்தில் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ஜோஜோ என்று பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து ஜோஜோ என்பதற்கு ஜோவிகா தான் பொருள் என்று பலர் கமென்ட் பகுதியில் பதிவு செய்தனர்
ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் ஓயாமல் தூங்கிக் கொண்டிருக்கும்போது நாய் குலைப்பதை மறைமுகமாக பிரதீப் குறிப்பிட்டு இருப்பதாகவும் சில பதிவு செய்கின்றனர். அதுமட்டுமின்றி ஒரு சிலர் ஜோஜோ என்பது அவருடைய அடுத்த படத்தின் டைட்டிலாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
சாதாரணமாக பதிவு செய்த ஒரு நாய் புகைப்படத்தை பல்வேறு கற்பனைகளுடன் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்திருப்பதை பார்த்த பிரதீப் , ’ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியா போட விட மாட்றாங்க..’என்று சற்று முன் பதிவு செய்துள்ளார்.
Jojo 💜 pic.twitter.com/Zkc47hr6sV
— Pradeep Antony (@TheDhaadiBoy) December 1, 2023
Oru nai photo kooda nimmathiya poda vida matreengale 🤔 pic.twitter.com/8qiRgrqES1
— Pradeep Antony (@TheDhaadiBoy) December 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments