யாராவது வேணுன்னு செய்வாங்களா, ஆனால் நான் செய்வேன்.. கமலுக்கே குறும்படம் போட்ட பிரதீப்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் அவருக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து கூறி அவர் நடித்த படத்தின் வீடியோவையே பதிவு செய்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியின் வீடியோவை பிரதீப் பதிவு செய்துள்ளார். அதில், ‘ இவரு எக்சிட் கொடுக்கிறாராம் எனக்கு, யாராவது வேணும்னு செய்வாங்களா, ஆனா நான் செய்வேன், அதான் நம்ம ஸ்டைலு’ என்று கமல் பேசும் வசனத்தின் வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார்.
மேலும் ’நான் கமல்ஹாசன் அவர்களின் மிகப்பெரிய ஃபேன், சத்தியமா சொல்றேன்’ என்றும் தெரிவித்துள்ளது நக்கலின் உச்ச கட்டத்தை காட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும் ‘நல்லாயிருங்க.. தீர விசாரிப்பதே மெய்’ என்றும் பதிவு செய்துள்ளது, கமல்ஹாசனின் தீர்ப்பை தவறு என சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிகிறது. இந்த பதிவு செய்யப்பட்டு ஒரு சில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
தப்பு செய்யும் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் குறும்படம் போட்டுத்தான் இதுவரை பார்த்திருக்கின்றோம், ஆனால் கமலுக்கே குறும்படம் போட்டு காட்டிய பிரதீப்பின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
Big fan sir @ikamalhaasan ❤️ Sathiyama soldren ❤️
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 7, 2023
Wish you the happiest 69th birthday. I have the utmost respect for your art and contributions to Tamil Cinema. Love you 😘#NallaIrunga #TheeraVisaripatheMeihttps://t.co/4UH1jF44Gj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com