திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி ஆபத்தா? பொது சுகாதார நிபுணர் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனால் பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகாமல் இருந்தன. 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியதுடன் தான் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு இது குறித்த ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து பொங்கல் அன்று திரைக்கு வரும் ’மாஸ்டர்’ மற்றும் ’ஈஸ்வரன்’ படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது பொது சுகாதாரத்துறை நிபுணர் பிரதீப் கவுர் அவர்கள் தனது டுவிட்டரில் ’திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சமூக இடைவெளி இல்லாமல் மூடிய இடங்களில் இருப்பது கொரோனா வைரஸை தீவிரமாக பரப்பும் என்றும் இத்தகைய இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு திரையுலகில் உள்ள ஒரு சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பொது சுகாதார நிபுணரும் ட்வீட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments