திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி ஆபத்தா? பொது சுகாதார நிபுணர் டுவீட்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனால் பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகாமல் இருந்தன. 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியதுடன் தான் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு இது குறித்த ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து பொங்கல் அன்று திரைக்கு வரும் ’மாஸ்டர்’ மற்றும் ’ஈஸ்வரன்’ படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது பொது சுகாதாரத்துறை நிபுணர் பிரதீப் கவுர் அவர்கள் தனது டுவிட்டரில் ’திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சமூக இடைவெளி இல்லாமல் மூடிய இடங்களில் இருப்பது கொரோனா வைரஸை தீவிரமாக பரப்பும் என்றும் இத்தகைய இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு திரையுலகில் உள்ள ஒரு சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பொது சுகாதார நிபுணரும் ட்வீட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

ரசிகர்களின் அதிரடி முடிவு: ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என சமீபத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

பிக்பாஸ் வீட்டில் மறைக்கப்பட்ட உண்மைகள்: அனிதாவின் அதிர்ச்சி தகவல்கள்!

பிக்பாஸ் வீட்டில் தான் பேசிய முக்கிய தகவல்கள் ஒளிபரப்பாகவில்லை என்று ஏற்கனவே கஸ்தூரி உள்பட ஒருசில போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் தற்போது அனிதாவும் அதே குற்றச்சாட்டை தனது

அடுத்த படம் குறித்து செல்வராகவனின் முக்கிய தகவல்!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் இயக்காத நிலையில் தற்போது அடுத்தடுத்து தனது படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் 

ஃபினாலே டாஸ்க்: பாலாஜியை வெறுப்பேற்ற வேற லெவல் கேம் ஆடும் கேபி!

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது என்பதும் நேற்று இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் மூன்றாவது சுற்று நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது 

ரூ.36 கோடிக்கு வீடு வாங்கிய 4 படங்கள் மட்டுமே நடித்த நடிகை!

நான்கு படங்கள் மட்டுமே நடித்த ஒரு நடிகை ரூபாய் 36 கோடிக்கு மும்பையில் சொந்த வீடு வாங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது