பிரதீப் ஆண்டனி அப்பவே ஸ்ட்ராட்டஜியை யோசிச்சுருக்காரு.. கவினை அடித்ததற்கு இதுதான் காரணம்.!

  • IndiaGlitz, [Saturday,November 04 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கவின் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தபோது அவரை சிறப்பு விருந்தினராக பார்க்க வந்த சீசன் 7 போட்டியாளரான பிரதீப் கவினை அடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. கவினை பிரதீப் அடித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுவும் ஒரு ஸ்ட்ராட்டஜி தான் என்று தற்போது 7வது சீசனில் விசித்ராவிடம் பிரதீப் ஆண்டனி கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்லியாவை காதலித்ததால் கவின் மீது நெகட்டிவ் இமேஜ் இருந்தது, வெளியே உள்ள எல்லோரும் கவினை தப்பா பேசினார்கள், அதை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் அவனை அடித்தேன் என்று பிரதீப் ஆண்டனி கூறினார். கவினை நான் அடித்த பிறகு எல்லோரும் கவினின் நெகட்டிவ்வை மறந்துவிட்டு என்னைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள், என்னை தான் நெகட்டிவ் ஆக பார்த்தார்கள், கவின் பாசிட்டிவ் ஆகிவிட்டான் என்றும் இந்த ஸ்ட்ராட்டஜிக்கு தான் நான் அவனை அடித்தேன் என்றும் கூறினார்.

ஆனால் விசித்ரா அதனை ஏற்று கொள்ளாமல் ஒருத்தரை கைநீட்டி அடிப்பது தவறு என்றும் இதை கவின் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டான் என்றும் கூறினார். ஆனால் பிரதீப் ’என்னை அவனுக்கும் அவனுக்கு என்னையும் நன்றாக தெரியும், அதனால் அவன் என்னை தப்பாக நினைத்துக் கொள்ள மாட்டான், நான் யோசித்து அந்த ஸ்ட்ராட்டஜி சரியாக வொர்க்-அவுட் ஆனது என்று கூறினார். இதனை அடுத்து ரசிகர்கள் அப்பவே பயங்கரமாக யோசித்து ஸ்ட்ராட்டஜியை பிரதீப் செயல்படுத்தி இருக்காரே என்று ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

More News

மீண்டும் தள்ளிப்போகும் 'விடுதலை 2': அப்ப 'வாடிவாசல்' எப்போது?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த 'விடுதலை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து

பேருந்து படியில் தொங்கிய மாணவர்களை தாக்கிய நடிகை.. தட்டித்தூக்கிய காவல்துறை..!

பேருந்து படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை துணை நடிகை ஒருவர் தாக்கிய நிலையில் அவரை காவல்துறையினார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  

தொடர்ந்து பைக் ஓட்டுவேன், என்னிடம் சர்வதேச லைசென்ஸ் இருக்குது: விடுதலையான டிடிஎப் வாசன் பேட்டி..!

யூடியூபர் டிடிஎஃப் வாசன் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள நிலையில் தன்னிடம் சர்வதேச லைசன்ஸ் இருப்பதாகவும் அதனால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.

வணக்கம் இந்தியா.. 'இந்தியன் இஸ் பேக்': ரஜினி வெளியிட்ட 'இந்தியன் 2' வீடியோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக

மீண்டும் இணைகிறார்களா முத்து-மீனா? 'சிறகடிக்க ஆசை'யில் திடீர் திருப்பம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் குறுகிய காலத்தில் இந்த சீரியல் டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்துள்ளது.