close
Choose your channels

பிரதீப் அந்தோணி ஒப்புக்கொண்ட திரைப்படம்.. அட்வான்ஸ் பணம் மட்டும் இவ்வளவா?

Saturday, February 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கியதாக செக் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளராக பிரதீப் அந்தோணி இருந்தார். அவர் இந்த சீசனில் வலிமையான போட்டியாளராக இருந்ததால் அவர் இருந்தால் நாம் வெற்றி பெற முடியாது என்ற ஒரு கூட்டமே அவருக்கு எதிராக சதி செய்து பிரதீப் அந்தோணி மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வெளியேற்றியது.

அதன் பிறகு தான் பிரதீப் அந்தோணிக்கு மிகப்பெரிய வரவேற்பு சமூக வலைதளங்களில் கிடைத்தது என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு தொடர்ந்து கலந்து கொண்டு இருந்தால் கூட கிடைக்காத புகழ், அவர் வெளியேற்றப்பட்டவுடன் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரைப்படங்கள் இயக்குவதற்கான முயற்சி செய்து வருவதாகவும் ஒரு சில படங்களில் நடிக்க இருப்பதாகவும் பிரதீப் அந்தோணி கூறிய நிலையில் தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள ஒப்புக்கொண்டு 9 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கி உள்ளதாக செக் ஒன்றை அவர் வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வருஷம் நடிச்சு, கொஞ்சம் காசு சம்பாதிச்சிக்கிலாம்னு, அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். படம் பொறுமையா தான் வரும். எப்போ வரும்ன்னு எல்லாம் கேட்காதீங்க.. வரும்போது முடிஞ்சா தியேட்டர்ல பாருங்க’ என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து பிரதீப் அந்தோணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment