காச தவிர எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.. பிக்பாஸ் பிரதீப்பின் உருக்கமான பதிவு..!

  • IndiaGlitz, [Wednesday,March 20 2024]

காச தவிர எல்லாமே சம்பாதித்து வைத்திருக்கிறேன் என பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தனது சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக பிரதீப் அந்தோணி கலந்து கொண்டார் என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியில் குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் பிரதீப் இருந்தால் தங்களால் வெற்றி பெற முடியாது என்று முடிவு செய்த மாயா, பூர்ணிமா புல்லிங் கேங், அவரை சதிசெய்து வெளியேற்றிவிட்டது என்பதும் கமல்ஹாசனும் இதற்கு உடனடியாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு இன்று வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இருந்த ஆதரவை விட வெளியே வந்தவுடன் அவருக்கு இரு மடங்கு ஆதரவு அதிகரித்தது என்பதும் அவருக்கு ஆதரவாக பலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக பிரதீப் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது உருக்கமாக மீண்டும் ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் ’34 வயது ஆகிவிட்டது, திரும்பி பார்த்தா காச தவிர எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன், எதுவுமே இல்லடா எனக்கு, இருந்தாலும் எனக்கு நல்ல சாப்பாடு போட்டு படிக்க வைத்து இன்னும் என் பேஷனுக்காக சப்போர்ட் பண்ணிட்டு இருக்கும் என் நண்பர்கள் குடும்பத்திற்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது’ என பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் அவர் தனது சிறுவயது புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த பதிவுக்கு ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில் ’கண்டிப்பாக நீங்கள் ஒரு நாள் பெரிய ஆளாக வருவீர்கள் , உங்களுக்கு உதவி அனைவருக்கும் நீங்கள் அப்போது திருப்பி உதவி செய்யுங்கள்’ என்றும் தெரிவித்து வருகின்றனர்.