டைட்டில் வின்னர் யார் என கசிந்த தகவல்.. முதல் வாழ்த்து கூறிய பிரதீப் அந்தோணி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் டைட்டில் வின்னருக்கான எபிசோட் படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இறுதிப்போட்டியில் தகுதி பெற்ற அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் மாயா ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் நொடிக்கு நொடி அதிகரித்து வந்தது
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவல் படி அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்ற தகவலை பார்த்தோம். அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என ஏற்கனவே எதிர்பார்த்த நிலையில் அது உண்மையாகிவிட்ட நிலையில் பார்வையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பிரதீப் அந்தோணி முதல் நபராக தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ’எனக்காக அல்லது போறவங்க வர்றவங்ககிட்ட எல்லாம் சண்டை போட்டு, இன்னும் வீடியோ எல்லாம் போட்டு டிரெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கிற அன்பு உள்ளங்களே, ரொம்ப நன்றி! ஆனால் நான் சோகமாக எல்லாம் இல்லை, நீங்களும் சோகமாக இருக்காதீங்க, ஜாலி பண்ணலாம், வன்மம் போதும், முடிச்சுக்கலாம், அநியாயத்துக்கு அநியாயம் பண்றீங்க’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Vikatan la laam vandhurukku na unmaiya dhan irukumnu namburen 🔥
— Pradeep Antony (@TheDhaadiBoy) January 13, 2024
Congratulations Archana, Nalla iru 🙌#KurukkaVandhaKoushik https://t.co/806joGpGBg pic.twitter.com/fcn08YT1br
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com