பணப்பெட்டியை எடுத்த பூர்ணிமா.. கலாய்த்து பிரதீப் அந்தோணி போட்ட பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா 16 லட்சம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிய நிலையில் அவருடைய முடிவு புத்திசாலித்தனமானது என்று பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அவர் இருந்திருந்தால் இந்த வாரம் அவர் எலிமினேட் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் எடுத்த ஒரே புத்திசாலித்தனமான முடிவு இதுதான் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் பிரதீப் அந்தோணி தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவில் ’பூர்ணிமா அம்மா கிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியாக இருக்கிறேன். கூலிக்கு மாரடைக்கிற கும்பல் எல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாயை கிளறாதீங்க. நான் ஒருவருடைய கேரக்டரை சேதப்படுத்த மாட்டேன். அது என்னுடைய வேலையும் அல்ல’ என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் ’பொழைச்சு போங்க’ மற்றும் ’உங்க பொழப்ப கெடுக்க மாட்டேன்’ போன்ற ஹேஷ்டேக்குகளை பதிவு செய்து பூர்ணிமாவை கலாய்த்துள்ளார். பிரதீப் அந்தோணியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Poornima Amma kitta vaaku kudutha ore karanathukaaga amaithiya iruken. Kooli ku maar adikura gumbal laam ishtathukku pesi vaiya kelaratheenga. I don't play character assassination games, it's not my vibe.#PolachuPonga#UngaPolappaKedukkaMaten pic.twitter.com/uZSmVEtINq
— Pradeep Antony (@TheDhaadiBoy) January 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com