'பரவாயில்லை பொண்ணு கொடுக்குறாங்க என்னை நம்பி.. திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரதீப் அந்தோணி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் அந்தோணி தன்னுடைய திருமண அறிவிப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பிரதீப் அந்தோணி என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மாயா, பூர்ணிமா உள்ளிட்ட ஒரு சிலரின் சதி காரணமாக வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த சதியில் கமல்ஹாசனும் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபட்டதாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டினார்கள் என்பதும் தெரிந்தது.
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து இருந்தால் கூட கிடைக்காத பேரும் புகழும் அவர் வெளியேறிய பின்னர் கிடைத்தது என்பதும் அவர் தற்போது சினிமாவில் பிஸியாக இருப்பதாகவும் சில படங்களில் நடித்துக் கொண்டும் ஒரு படத்தை இயக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதீப் அந்தோணி தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் திருமணம் செய்ய போகும் மணமகளுடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எனக்கெல்லாம் நடக்காதுன்னு நினைச்சேன், பரவால்ல பொண்ணு கொடுக்குறாங்க என்ன நம்பி, இது 90ஸ் கிட்ஸ்களின் சாதனை என்று கேப்ஷனாக பிரதீப் அந்தோணி பதிவு செய்துள்ளார். இருப்பினும் அவரை திருமணம் செய்ய போகும் மணப்பெண் குறித்த எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Got engaged, yesterday 🙏 #FamilyMan#EnakulaamNadakathuNuNinaichen #ParavaillaPonnuKudukurangaEnnaNambi#90sKidsSaadhanaigal pic.twitter.com/vyg0DuCnaQ
— Pradeep Antony (@TheDhaadiBoy) June 17, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout