பிரபுதேவா நடிக்கும் புதிய திகில் படம்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

  • IndiaGlitz, [Friday,December 29 2017]

பிரபுதேவா ,தமன்னா நடிப்பில் விஜய் இயக்கிய திகில் படமான 'தேவி' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து மீண்டும் மூன்று மொழிகளில் ஒரு திகில் படத்தில் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

குறும்பட இயக்குனர் ஆகாஷ் சாம் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். திகில் படமாக இருந்தாலும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த படம் என்றும் ஃபேமிலி ஆடியன்ஸ்களை கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இந்த படத்தில் இதுவரை நடித்திராத தாவரவியல் நிபுணராக நடிக்கவுள்ளார். இன்றைய பூஜையை அடுத்து முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், 'அறம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ராம்ஸ், இந்த படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்

இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் இசையமைப்பாளர் உள்பட மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு 20 வயது விஷ்ணு ராமகிருஷ்ணன் என்ற இளைஞர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

More News

எம்.எல்.ஏ பதவியேற்ற தினகரனிடம் விஷால் வைத்த முதல் கோரிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தினகரன் இன்று தலைமைச்செயலகத்தில் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார். தினகரனுக்கு முதல் கோரிக்கை விஷாலிடம் இருந்து வந்துள்ளது.

துரோகத்திற்கு என்றைக்கும் வெற்றி கிடைத்ததில்லை: எம்.எல்.ஏ பதவியேற்ற பின் தினகரன் பேட்டி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஐம்பது ஆண்டுகால திராவிட கட்சிகளை தனி ஒருவனாக வீழ்த்திய டிடிவி தினகரன் சற்றுமுன்னர் ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவியேற்று கொண்டார்.

நயன்தாராவின் வெற்றி மக்களின் வெற்றி: விக்னேஷ்சிவன்

நயன்தாரா நடித்த 'அறம்' போன்ற நல்ல படத்தின் வெற்றி மக்களின் வெற்றி. கடின உழைப்பை கொடுத்த இயக்குனர் கோபி, இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்பட படக்குழுவினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்'

சிறுமி ஹாசினியையும், தாயையும் நான் கொலை செய்யவில்லை: தஷ்வந்த் திடீர் பல்டி

சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்ததாகவும்,பெற்ற தாயையே கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்த், போலீசாரின் பிடியில் இருந்து தப்பி பின்னர் மீண்டும் பிடிபட்டார்

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எந்த அமைச்சரும் பார்க்கவில்லை: ஆனந்த்ராஜ்

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை எந்த அமைச்சரும் பார்க்கவில்லை. டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதா என்னும் சந்தேகம் உள்ளது