5 முறை உலக சாம்பியன் வென்றவரை சந்தித்த பிரபுதேவா

  • IndiaGlitz, [Sunday,December 17 2017]

மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவின் பெருமையை உலக அளவில் பறை சாற்றியவர் மேரிகோம். இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்தார் என்பதும் அந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் போன்ற துறைகளில் பிரபலமான பிரபுதேவா, மேரிகோம் அவர்களை சமீபத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து 'மேரிகோம் இந்தியாவின் பெருமைக்குரிய நபர்' என்று கூறியுள்ளார்.

பிரபுதேவா தற்போது தமிழில் 'குலேபகாவலி', யங் மங் சங்', 'மெர்க்குரி', 'காமோஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் சல்மான்கான் நடிப்பில் 'டபாங் 3' படத்தையும் விரைவில் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.