பிரபுதேவா தந்தை கேரக்டரில் பிரபல மலையாள இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,February 22 2016]

மலையாள சூப்பர்ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் பல நேரடி தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் இன்னொரு மலையாள திரையுலகின் பிரபலம் ஒருவர் தமிழ்ப்படம் ஒன்றில் அறிமுகமாகிறார்.


சூப்பர் ஹிட் ஆன மலையாள திரைப்படமான 'ஷட்டர்' உள்பட ஏராளமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஜாய் மாத்யூஸ். இவர் இயக்குனர் மட்டுமின்றி மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள படத்தில் பிரபுதேவாவின் தந்தையாக நடிக்க ஜாய் மாத்யூஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவாவுடன் ஜாய் மாத்யூஸ் எடுத்த புகைப்படம் ஒன்று அவருடைய சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளதே இந்த செய்தியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிப்ரவரி 28 முதல் ஏரியா மாறுகிறார் வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு இயக்கிய முதல்படமான 'சென்னை 600 028 திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியவதை அடுத்து அதே படத்தில் நடித்த சிவா...

கார்த்தியின் தோழா'வுக்கு கிடைத்த முதல் வெற்றி

மெட்ராஸ், கொம்பன் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் கார்த்தியின் அடுத்த படமான 'தோழா' படமும் ஹிட்டானால் கோலிவுட்டில் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்த ஹீரோ பட்டியலில் கார்த்தியும் இணைந்துவிடுவார்...

அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஆசை. பிரபல ஹீரோ

'மிருகம்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'ஈரம்', 'அரவான்', 'யாகாவாராயினும் நா காக்க' போன்ற பல படங்களில் நடித்த கோலிவுட்டின் இளம் நாயகன்...

ஹாலிவுட்டுக்கு செல்லும் ஜெயம் ரவி திரைப்படம்

தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான 'மிருதன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை...

4 மணி நேரம் மேக்கப் போட செலவழித்த 'ரெமோ' சிவா

'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் படத்தை அடுத்து தற்போது 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத...