நயன்தாரா கதையா 'தேவி'? பிரபுதேவா விளக்கம்

  • IndiaGlitz, [Friday,September 30 2016]

பிரபுதேவா, தமன்னா, நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் பிரபுதேவா உள்பட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் தமன்னா நடிகையாக நடிப்பதாலும், பிரபுதேவா ஹீரோவாக நடிப்பதாலும், இந்த படத்தின் கதை நயன்தாராவின் கதை என்று கூறப்பட்டது. சமீபத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் இதுகுறித்து பிரபுதேவாவிடம் கேட்கப்பட்டபோது, அவர் இதை முற்றிலும் மறுத்தார். நயன்தாராவுக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை என்று உறுதிபட கூறியுள்ளார்.
மேலும் தான் ஒரு இயக்குனராக இருந்தபோதிலும், இந்த படத்தில் விஜய்யின் இயக்குனர் பணியில் தலையிடவில்லை என்றும் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் அவர் கூறியபடி நடித்தேன்' என்றும் அவர் மேலும் கூறினார்.

More News

ரஜினியால் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டதா 'தல 57' படப்பிடிப்பு?

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 57 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில்...

இளையதளபதியையே அசர வைத்த பிரபல நடிகர் மகனின் நடனம்

இளையதளபதி விஜய் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி அவர் ஒரு அற்புதமான டான்சர் என்பது அனைவருக்கும் அறிந்ததே.

பிரபுதேவாவின் முதல் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி

பிரபல நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு நடித்த படம் தேவி'. தமிழ், தெலுங்கு...

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த 'ரெமோ' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது...

உதயநிதியின் அடுத்த படத்தில் இணைந்த இரு வில்லன்கள்

'மனிதன்' வெற்றிக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்தை 'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' இயக்குனர் கவுரவ் நாராயணன்...