பிரபுதேவா-தமன்னா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Thursday,June 16 2016]

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் திகில் படமான 'தேவி எல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'தேவி எல்' படத்தின் டீசர் நாளை அதாவது ஜூன் 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல்முறையாக பிரபுதேவா, தமன்னா ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் சோனுசூட் முக்கிய வேடத்திலும் '2.0' நாயகி எமிஜாக்சன் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் 'தேவி எல்' என்றும் தெலுங்கில் 'Abhinetri ' என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சாஜித்-வாஜித், ஜி.வி.பிரகாஷ், விஷால் ஆகிய மூவரும் இசையமைத்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.