close
Choose your channels

ஹீரோவாகும் இயக்குனர் பிரபுசாலமன் மகன்: டைட்டில் அறிவிப்பு

Wednesday, July 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கும்கி உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் மகன் ஹீரோவாகும் திரைப்படத்தின் டைட்டில் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல இயக்குனர் பிரபுசாலமன் மகன் சஞ்சய். இவர் ஜோஜோ இந்தியன் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ’டேய் தகப்பா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கெளசிக் என்பவர் இயக்குகிறார் என்பதும், இவர் ஏற்கனவே பல விருதுபெற்ற குறும்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் நாயகியாக ஆராத்யா என்பவர் நடிக்க இருப்பதாகவும் மேலும் முக்கிய கேரக்டர்களில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷத் கான் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜான் ராபின்ஸ்  இசையில் சுபாஷ் ஒளிப்பதிவில், குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கர் நடன இயக்கத்தில் உருவாகும் இந்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியது என்பதும், விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவதை அடுத்து அவரது திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment