'கும்கி' படத்தின் தொடர்ச்சியா 'கும்கி 2? பிரபுசாலமன் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
2012 ம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான 'கும்கி' படம் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் 'கும்கி' படம் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் 'கும்கி 2' படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுற்று, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. பல படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கும்கி படத்திற்கும், 'கும்கி 2' படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்கிறார் பிரபுசாலமன்.
இந்த படத்தின் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.
சுகுமார் ஒளிப்பதிவில், நிவாஸ் கே.பிரசன்னா இசையில், புவன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பிரபுசாலமன்
இந்த படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது: கும்கி 2 பிரமாண்டமான ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2.
குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கல, பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த கும்கி 2 இருக்கும்.
வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் K. பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com