கருணாநிதியை நேரில் சந்திக்க முடியவில்லை: நடிகர் பிரபு

  • IndiaGlitz, [Saturday,July 28 2018]

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்கோளாறு காரணமாக நேற்றிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள முக்கிய விஐபிகளும், திரையுலகினர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு சற்றுமுன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரபு கூறியதாவது.

கருணாநிதியின் உடல், சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அவரை நேரில் என்னால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவரது உடல் தேறி வரும் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய வயதுக்கு மரியாதை கொடுத்து வதந்தியை பரப்பாமல் அனைவரும் பொறுமையாக இருந்தால் நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும். அவர் பூரண குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.