தமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,October 20 2020]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் சமீபத்தில் காலமானதை அடுத்து முதல்வரின் வீட்டிற்கு நேரில் சென்று அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்

நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின், நடிகர் விஜய் சேதுபதி உள்பட ஒருசிலர் முதல்வரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு முதல்வரின் தாயார் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறித்துப் பார்த்தோம்

இந்த நிலையில் இன்று முதல்வர் தாயாரின் மறைவையொட்டி நடிகர்கள் எஸ்வி சேகர், பிரபு ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அதேபோல் நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா சற்றுமுன் முதல்வரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தேமுதிக கட்சியின் எல் கே சுரேஷ் ஆகியோரும் இன்று முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது