நடிகர் பிரபுவுக்கு கொரோனாவா? அவரே அளித்த விளக்கம்

  • IndiaGlitz, [Friday,October 02 2020]

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் அவரது மணிமண்டபத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன் பிரபு கலந்து கொள்ளவில்லை. இதனை அடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு என்று வதந்திகள் பரவியது.

இதுகுறித்து நடிகர் பிரபு ஊடகமொன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். தனது காலில் சிறு காயம் ஏற்பட்டாதால், தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்ததாகவும், காயத்துடன் கலந்து கொள்ள வேண்டாம் என்பதால் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தனக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட சிவாஜி பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன் விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.