close
Choose your channels

பிரபுதேவா அடுத்த படத்தை இயக்கும் பிரபல பாடலாசிரியர்!

Sunday, August 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் பிரபுதேவாவின் அடுத்த படத்தை பிரபல பாடலாசிரியர் ஒருவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட்டு, இன்று பூஜையும் நடத்தப்பட்டுள்ளது

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ஆகிய பிரபுதேவா ஏற்கனவே ஐந்து தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

பிரபுதேவா ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கும் இந்த படத்தை பிரபல பாடலாசிரியர் பா விஜய் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது என்பதும், படக்குழுவினர் அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடலாசிரியர் பா விஜய் ஏற்கனவே ’ஞாபகங்கள்’ ’ஸ்ட்ராபெர்ரி’ மற்றும் ’ஆருத்ரா’ ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் அவர் இயக்கும் நான்காவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு வித்தியாசமான கேரக்டர் என்றும் இந்த படம் நிச்சயம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை எம்எஸ் மூவீஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்நிறுவனத்தின் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment