பிரபுதேவா அடுத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் மட்டுமே கவனத்தில் கொண்டு இருந்த பிரபுதேவா தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் பிசியாகி வருகிறார். ஏற்கனவே தமிழில் ஏழு படங்கள் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
பிரபுதேவாவின் இந்த படத்திற்கு புதிய படத்திற்கு ‘முசாசி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த மாஸ் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை ஜாய் பிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரபுதேவாவுடன் மாஸ்டர் மகேந்திரன், ஜான் விஜய், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பிரசாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவும் அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Here is the exciting first look of @PDdancing's #Musasi, Directed by debutant @samrodrigues23, Produced by #JohnBritto of #JoyFilmBoxEntertainment.#MusasiFirstLook @Actor_Mahendran #JohnVijay @prasad_sn_ #Vignesh #VTVGanesh #Binupappu @editoranthony @proyuvraaj pic.twitter.com/PquDg8GQ5B
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com