மகனுடன் பிரபுதேவா.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஆச்சரியமான ரசிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபுதேவா தனது மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
தமிழ் திரை உலகில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருபவர் பிரபுதேவா என்பதும் தற்போது அவர் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பிரபுதேவா கடந்த 1995ஆம் ஆண்டு ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2011ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர்.
இருப்பினும் தனது மகனுடன் அவ்வப்போது பிரபுதேவா நெருக்கமாக இருந்து வருகிறார் என்பதும் மகனுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்த பிரபுதேவா, ‘மகனுடன் சுற்றுலா சென்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஒரு ஹீரோவுக்குரிய எல்லா தகுதியும் பிரபுதேவா மகனிடம் தெரிவதாகவும், விரைவில் அவரை ஹீரோ ஆக்குங்கள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பிரபுதேவா அவரது மகனை விட இளமையாக இருப்பதாகவும் அந்த அளவுக்கு அவர் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதாகவும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments