குட்டிச்சுவரில் அமர்ந்து பிரபுதேவாவுடன் கதைபேசும் முன்னணி நடிகர்… வைரல் புகைப்படம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவா எப்போதும் துருதுரு வென இருப்பது வழக்கம். நடின இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல அனுபவங்களைக் கொண்ட இவருடன் நடிகர் தனுஷ் குட்டிச் சுவரில் அமர்ந்து கதை பேசுவது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது வரை 26 கோடி ரசிகர்களை சென்று அடைந்து இருக்கிறது. மேலும் இணையத்தில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தப் பாடல் என்ற அடையாளத்தையும் இது பெற்று தந்திருக்கிறது. இந்தப் பாடலில் நடிகர் தனுஷ் – நடிகை சாய்பல்லவி ஆகிய இரண்டு பேரும் சிறந்த நடனத்தை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.
இந்நிலையில் நண்பர்கள் சிறந்த குடும்பத்திற்கு ஈடானவர்கள் எனக் குறிப்பிட்டு நடிகர் தனுஷ் பிரபுதேவாவுடன் அரட்டை அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com