மனைவி, குழந்தையுடன் திருப்பதி சென்ற பிரபுதேவா.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,July 21 2023]

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபு தேவா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பின் நடிகர் மற்றும் இயக்குனராகவும் பிரபுதேவா ஜொலித்தார். இந்த நிலையில் பிரபுதேவா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை பிரபுதேவா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பிரபுதேவா குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபுதேவா தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் நேற்று திருப்பதி சென்ற நிலையில் இன்று காலை விஐபி தரிசனத்தில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். மேலும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் கொடுத்த தீர்த்த பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.