close
Choose your channels

காட்டுல புலி வரும்போது காடே சைலண்ட் ஆயிரும்: 'பேட்ட ராப்' டிரைலர்..!

Friday, September 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவா நடித்த "பேட்ட ராப்" என்ற திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான டிரைலர் சற்று முன்பு வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சினிமா ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக முயற்சித்து வரும் பிரபுதேவா, தொடர்ந்து தோல்விகளை எதிர்கொள்கிறார். அவருடைய தாய், தந்தை தனது மகன் கண்டிப்பாக ஹீரோவாக வருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், பல்வேறு பிரச்சனைகள் மற்றும் இடைஞ்சல்களுக்கு பிறகு, பிரபுதேவா ஹீரோ ஆனாரா என்பதே இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிகிறது.

பிரபுதேவா ஜோடியாக வேதிகா நடித்திருக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், மைம் கோபி, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சினு இயக்கத்தில், டி இமான் இசையில் உருவாக்கப்பட்ட இந்த படம், பிரபுதேவாவுக்கு இன்னொரு வெற்றிப் படமாக இருக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

"பேட்ட ராப்" திரைப்படத்தை ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை சஃபையர் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment