தேர்தலுக்காக பிரபுதேவா பாடிய கானா பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் 16ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து வாக்காளர்கள் பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல புரமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இந்த வீடியோக்களில் கோலிவுட் நட்சத்திரங்கள் தோன்றி வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது பிரபுதேவா பாடிய ஒரு பாடலை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கவிஞர் யுகபாரதி எழுதிய இந்த கானா பாடல் வாக்காளர்கள் தங்கள் உரிமையை பணத்திற்காக இழந்துவிடக்கூடாது என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறது. 'என்னாத்துக்கு நோட்டு' என்று தொடங்கும் ஒரு நிமிடம் 53 நொடிகள் உள்ள இந்த பாடலின் முடிவில் 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல' 'நேர்மையாக வாக்களிப்போம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி திரையில் வாக்காளர்கள் தோன்றுகின்றனர்.
இதோ அந்த பாடலின் வரிகள்
என்னாத்துக்கு நோட்டு எனக்கு ஒரு டவுட்டு
காச நீட்டி ஓட்டு கேட்கும் ஆள ஆக்கு அவுட்டு
ஓட்டு நம்ம உரிம, உணந்துகிட்டா பெரும
காச வாங்கி ஓட்டு போட்டா தீந்திடுமா வரும?
நேர்மை இங்க யாரு தேடிப்பாரு, நேர்மை இங்க யாரு
தேடிதேடி பாரு தேர்தலுக்கு தேர்தலுக்கு ரூவா எதுக்கு கூறு
நல்லவங்க யாரு தேடிப்பாரு, நல்லவங்க யாரு தேடித்தேடி பாரு
உண்மையான தேர்தலுக்கு ரூவா எதுக்கு கூறு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments