பிரபுதேவாவின் போலீஸ் படத்தில் இணைந்த பிரபலங்கள்

  • IndiaGlitz, [Monday,June 11 2018]

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படம் ஒன்றின் படபிடிப்பு இன்று காலையில் பூஜையுடன் தொடங்கியது.

பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்திற்கு கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவும், டி இமான் இசையமைக்கவும் செய்கிறார்கள். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ சி முகில்.

பிரபுதேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும், இந்த படம் பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும் ’என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில். இவர் பிரபுதேவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படபிடிப்பு இன்று காலையில் சென்னையில் தொடங்கியது. இதில் பிரபுதேவா, முகேஷ் திவாரி கலந்து கொள்ளும் சண்டை காட்சி படமாக்கப்படுகிறது.