பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: செம கில்லர் படம் என தகவல்!

  • IndiaGlitz, [Thursday,July 21 2022]

பிரபுதேவா நடிப்பில் உருவான ’மை டியர் பூதம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் குழந்தைகளுக்கான படம் என்பதால் திருப்திகரமான வசூல் இருந்ததாகவும் இந்த படம் ஒரு வெற்றி படம் என்றும் வினியோகஸ்தர்களால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரபுதேவா நடித்துள்ள அடுத்த திரைப்படமான ‘பாகீரா’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’பாகீரா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செம கில்லர் படம் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாகவும், அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என 7 நாயகிகளும் நடிக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், கணேசன் இசையில் உருவாகும் இந்த படம் பிரபுதேவாவின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.