பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,February 28 2019]

நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடித்த 'சார்லி சாப்ளின் 2' திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படமான 'தேவி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

'தேவி 2' திரைப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேற்று நடைபெற்ற 'எல்.கே.ஜி' படத்தின் வெற்றி விழாவில் அறிவித்தர். தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை 'தேவி' படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.

'தேவி' திரைப்படத்தில் நடித்த பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் ஆகியோர் இந்த படத்திலும் நடித்திருக்க அவர்களுடன் நந்திதா ஸ்வேதா, கோவை சரளா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ், யோகிபாபு, குருசோமசுந்தரம், நாசர், உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கோபிசுந்தர் இசையமைத்துள்ள இந்த படம் முதல் பாகம் போலவே தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.