பாட்டு அடி ஆட்டம் 𝚁𝙴𝙿𝙴𝙰𝚃... அடுத்த பட அப்டேட் கொடுத்த பிரபுதேவா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபுதேவா நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபுதேவா நாயகனாக நடித்த ’பேட்ட ராப்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்தது. இதனை அடுத்து படக்குழுவினர்கள் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பிரபுதேவா, பாட்டு அடி ஆட்டம் ரிப்பீட் என பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் பணி புரிந்தது மகிழ்ச்சியான அற்புதமான அனுபவம் என்றும் இயக்குனர் எஸ்ஜே சீனு நல்ல நண்பர் ஆகிவிட்டார் என்றும் தெரிவித்தார். அவர் ஒரு திறமையான இயக்குனர் என்று அவருடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் குறிப்பாக இந்த படத்திற்கு இசையமைத்த டி இமான் இசை முற்றிலும் சூப்பர் என்றும் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஜோபு, ஒளிப்பதிவாளர் ஜித்து தாமோதர் மற்றும் மிகச் சிறந்த நடிகையான வேதிகா என ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபுதேவா ஜோடியாக வேதிகா நடித்திருக்கும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
𝐏𝐞𝐭𝐭𝐚 𝐑𝐚𝐩, 𝐀𝐥𝐥 𝐝𝐨𝐧𝐞 𝐚𝐧𝐝 𝐰𝐫𝐚𝐩𝐩𝐞𝐝!
— Prabhudheva (@PDdancing) February 20, 2024
Happy moments and a wonderful experience! Brother and good friend SJ Sinu, he's one talented director. It was real nice working with him, D Imman's music is absolutely Bea(u)tiful. Thanks to producer Jobi P Sam, Great… pic.twitter.com/QlkV2HuRbh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments