சிம்பு பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபுதேவா: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அடுத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாக உள்ளதாக பிரபுதேவா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியதாவது: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரதன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தில் நான் நடித்துள்ளேன். இதுவரைக்கும் நான் நடித்திராத வித்தியாசமான கேரக்டர். புதுப்புது கெட்டப்புகளில் நான் இந்த படத்தில் நடித்துள்ளது எனக்கே வித்தியாசமாக இருந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்று பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா நடித்த ’பொன்மானிக்கவேல்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No more Valentine's day folks!!. And here is @PDdancing and Director @Adhikravi joins together for a Never Before seen Genre.
— Bharathan Pictures (@BharathanPic) February 12, 2020
First look releasing from Feb 14#KadhalanReturns@BharathanPic @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/5DYoQuluWH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments