7 நாயகிகளுடன் பிரபுதேவா நடித்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,February 19 2023]

தமிழ் திரை உலகின் ஏழு பிரபல நடிகைகளுடன் பிரபுதேவா நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என்ற அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவா நடித்து வரும் படங்களில் ஒன்று ’பாகீரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த ஆண்டு ரிலீஸ்க்கு தயாரானது என்பதும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் மார்ச் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் பிரபுதேவாவுடன் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்சிஅகர்வால் மற்றும் சோனியா அகர்வால் ஆகிய ஏழு நாயகிகள் நடித்துள்ளனர்.

சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்திற்காக பிரபுதேவா மொட்டை அடித்து வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காஷ்மீரில் உள்ள சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யும் த்ரிஷா.. வைரல் வீடியோ..!

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீரில் இருக்கும் நடிகை த்ரிஷா அங்கு சிவன் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

நடுரோட்டில் செம ஆட்டம் போட்ட 'லியோ' நடிகை.. வைரல் வீடியோ..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகை ஒருவர் காளகஸ்தியில் நடு ரோட்டில் கொட்டடிக்கும் இசைக்கேற்ப ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான மயில்சாமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57. 

'பத்து தல' படத்தின் அடுத்த பாகம் உருவாகிறதா?

சிம்பு நடித்த முடித்துள்ள 'பத்து தல' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தின் புரமோஷன்

'மாவீரன்' ரிலீஸ் எப்போது? சிவகார்த்திகேயனின் மெகா திட்டம்..!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சிங்கிள் பாடல் வெளியானது என்பதும்