7 நாயகிகளுடன் பிரபுதேவா நடித்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,February 19 2023]

தமிழ் திரை உலகின் ஏழு பிரபல நடிகைகளுடன் பிரபுதேவா நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என்ற அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவா நடித்து வரும் படங்களில் ஒன்று ’பாகீரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த ஆண்டு ரிலீஸ்க்கு தயாரானது என்பதும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் மார்ச் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் பிரபுதேவாவுடன் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்சிஅகர்வால் மற்றும் சோனியா அகர்வால் ஆகிய ஏழு நாயகிகள் நடித்துள்ளனர்.

சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்திற்காக பிரபுதேவா மொட்டை அடித்து வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.