பிரபுதேவாவின் அடுத்த படத்தை புரமோஷன் செய்யும் விஜய்சேதுபதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபுதேவாவின் அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி புரமோஷன் செய்ய உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பிள்ளை தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தேவா பிரபுதேவா நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த், பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா உள்பட பலர் நடிக்க உள்ளனர்.
டி.இமான் இசையில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ராகவன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’மஞ்சப்பை’ ’கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
My next movie MOTION POSTER to be launched by #VIJAY SETHUPATHI today @ 6 pm.@Abhishek_films_ RameshPPillai‘s @PDdancing @nambessan_ramya @actorashwanth @samyuktha_shan@immancomposer@uksrr @Sanlokesh @onlyartmohan @editordeva85 @@onlynikil @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/j9Avtw7BPX
— N Ragavan (@naviin2050) December 9, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com