பிரபுதேவாவை சந்தித்து மனம்விட்டு பேசினாரா நயன்தாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'வில்லு' படத்தில் பிரபுதேவா-நயன்தாரா ஜோடி நட்பாகி, அந்த நட்பு படம் முடியும்போது காதலாக மாறியது. இந்த காதல் திருமணத்தையும் நெருங்கியது. ஒரு பக்கம் பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்ய, இன்னொரு பக்கம் நயன்தாரா இந்துவாக மதம் மாறி திரையுலகை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்தார்.
ஆனால் யார் கண் பட்டதோ திடீரென இருவருக்கும் இடையே பிரேக்-அப் ஆகியது. அதன் பின்னர் பிரபுதேவா, பாலிவுட்டில் பிசியானார். நயன்தாராவும் கோலிவுட்டில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து பல வெற்றி படங்களை கொடுத்தார்.
இந்நிலையில் 'நானும் ரவுடிதான்' படத்தின்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை கடற்கரையோரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரபுதேவாவும் நயன்தாராவும் தற்செயலாக சந்தித்ததாகவும், அந்த சமயத்தில் இருவரும் மனம்விட்டு ஒருசில விஷயங்களை பேசியதாகவும் தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் கோலிவுட்டில் நாள்தோறும் பரவி வரும் வதந்திகளில் ஒன்றுதான் இந்த தகவலும் என்றும், இப்படி ஒரு சந்திப்பு நடைபெறவில்லை என்றும் இரு தரப்பினர்களுக்கும் நெருக்கமானவர்களால் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout