17 வயது ஆசை இப்போதுதான் நிறைவேறியது : எமிஜாக்சன்
- IndiaGlitz, [Saturday,May 07 2016]
சமீபத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான எமிஜாக்சன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் எமிஜாக்சன் 17வயதாக இருந்தபோது தினமும் பள்ளிக்கு தனது தங்கையுடன் காரில் சென்று வருவாராம். காரை அவரே ஓட்டி வரும்போது ஆங்கில பாடல்களை பாடிக்கொண்டே வந்ததாகவும் அப்போது எதிர்காலத்தில் மியூசிக் ஆல்பம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் கூறினார்
எமிஜாக்சனின் 17வயது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. ஆம் பிரபுதேவா இயக்கி வரும் 'சிங் இஸ் பிளிங்' ஆல்பத்திற்காக எமிஜாக்சன் பாடவுள்ளாராம். இந்த ஆல்பத்தின் இசையமைப்பாளர் மஞ்ச் முசிக் இசையில் பஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எமிஜாக்சன் பாடவுள்ளார். பாடுவது மட்டுமின்றி இந்த ஆல்பத்தில் ஒருசில காட்சிகளில் எமிஜாக்சன் ஆடவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.