சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபுதேவா: மாஸ் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபுதேவா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி நடித்த ’ஆச்சார்யா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது ’காட்பாதர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மோகன்லால் நடிப்பில் உருவான ’லூசிபர்’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இணைந்து நடனமாட உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணிபுரிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் இந்த பாடல் மாஸாக இருக்கும் என்றும் இந்த பாடலை திரையில் பார்க்க காத்திருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் சிரஞ்சீவி ரசிகர்கள் மற்றும் பிரபுதேவா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Yayyyy !! ❤️
— thaman S (@MusicThaman) May 3, 2022
THIS IS NEWS ?????? @PDdancing Will Be Choreographing An Atom Bombing Swinging Song For Our Boss @KChiruTweets and @BeingSalmanKhan Gaaru What A High Seriously @jayam_mohanraja Our Mighty #GodfatherMusic #Godfather
This is GONNA LIT ?? THE Screens For Sure ?? pic.twitter.com/H618OaI9b6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com