பிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 24 2020]

பிரபுதேவா நடிப்பில் முகில் செல்லப்பன் இயக்கிய ‘பொன்மாணிக்கவேல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

‘பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என இந்த படத்தை தயாரித்த நேமிசந்த் ஜபக் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

பிரபுதேவா ஜோடியாக, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இமான் இசையில் வெங்கடேஷ் ஒளிப்பதிவில் சிவாநந்தீஸ்வரர் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது